×

பிரபல மருத்துவமனை பெயரில் போலி இணைய தளம் உருவாக்கி உடல் உறுப்புகளை விற்று தருவதாக நூதன மோசடி: நைஜீரிய ஆசாமி உள்பட 5 பேர் கைது; சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை

சென்னை: பிரபல மருத்துவமனை பெயரில், போலி இணைய தளம் உருவாக்கி, உடல் உறுப்புகளை விற்று தருவதாக மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் பெயரில் போலியாக இணையதளத்தை உருவாக்கி அதில், உடல் உறுப்புகளை விற்றுதருவதாக போலி விளிம்பரம் செய்து, ஏமாற்றும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் பரங்கிமலை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில், சைபர் கிரைம் போலீஸ் ஆய்வாளர் கவிதா, மோசடி, இணையவழியில் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் மோசடி பேர்வழிகள் பெங்களுருவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சைபர் கிரைம் தனிப்படை போலீசார் பெங்களூருவில் தங்கி இருந்த மோசடி கும்பலை சேர்ந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த ஜெர்மியா (50), உகாண்டா நாட்டை சேர்ந்த ஒலிவியா (25) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் கொடுத்த தகவலின்பேரில், உடல் உறுப்புகளை விற்பது குறித்து பேசுவதற்கும், பணத்தை பெறவும் வங்கி கணக்குகளை தந்து உதவிய மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மோனிகா (59), இரோம் ஜேம்சன் சிங் (21), திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ராம் பகதூர் ரியாங் (31) ஆகியோரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், உடல் உறுப்புகளை பெற்று தருவதாகவும், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு திருமண வரன் பார்த்தல் போன்ற பல மோசடிகள் செய்து பொதுமக்களை ஏமாற்றி பணம் கட்ட சொல்லி ஏமாற்றுவது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களிடமிருந்து செல்போன்கள், வங்கி கணக்கு புத்தகம், மடிக்கணினி போன்றவற்றை பறிமுதல் செய்தனர் மேலும், இவர்கள் எத்தனை நபர்களிடம் மோசடி செய்து உள்ளார்கள், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பிரபல மருத்துவமனை பெயரில் போலி இணைய தளம் உருவாக்கி உடல் உறுப்புகளை விற்று தருவதாக நூதன மோசடி: நைஜீரிய ஆசாமி உள்பட 5 பேர் கைது; சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...