×

நினைவு நாளை முன்னிட்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை

பரமக்குடி : பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர் மரியாதை செலுத்தினர். இதில் திமுக சார்பில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், மாநில விவசாய அணி இணைச் செயலாளர் முருகவேல், மாநில தீர்மானக்குழு துணைத்தலைவர் சுப.த.திவாகர், போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குணசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் போகலூர் ஒன்றிய குழு துணை தலைவர் வழக்கறிஞர் பூமிநாதன், போகலூர் மேற்கு செயலாளர் குணசேகரன், பொட்டிதட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், போகலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிரவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குமரகுரு, நயினார் கோவில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா குமரகுரு, பரமக்குடி ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணமூர்த்தி, பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்எம்டி அருளானந்து உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் தலைமையில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன், இளைஞர் அணி செயலாளர் ராஜமோகன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முருகேசன், விருதுநகர் மாவட்ட செயலாளர் கதிரவன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர்கள் வைகை பாலன், சுப்பிரமணியன், பசும்பொன், மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம், நயினார்கோயில் ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த், போகலூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ், நாகர்கோயில் ஒன்றிய பொருளாளர் நாகநாதன், போகலூர் ஒன்றிய இணைச் செயலாளர் நவாஸ்கான், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் சிலம்பு ராஜ், கருமல் ஒன்றிய கவுன்சிலர் முருகன் மரியாதை செலுத்தினர்.

தேவேந்திரகுல கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சந்தன பிரியா பசுபதி பாண்டியன் தலைமையில் தமிழர் மாமன்றம்(பிபிஎம்டி) நிறுவனர் மனோகரன், ஆத்தூர் ராஜேந்திரன், திண்டுக்கல் நடராஜன், சாத்தூர் ஆறுமுகம், குணா பாண்டியன், திருநெல்வேலி மணி, நிர்வாகிகள் அண்டக்குடி முருகேசன், காயாம்பு பாண்டியன், காளிதாஸ் பாண்டியன், சீதகாதிர்,மோகன், முருகன், மகாலிங்கம், விஜயகாந்த், சுரேஷ், கதிர், முரளி மற்றும் பரமக்குடி எம்ஜிஆர் மகளிர் மன்றத்தினர் கலந்து கொண்டு மலர் வளையும் வைத்து மரியாதை செலுத்தினர்.

தேவேந்திரகுல இளைஞர்கள் எழுச்சி பேரவை நிறுவனர் தளபதி ராஜ்குமார் தலைமையில் மாநில தலைவர் குருநாதன், மாநிலச் செயலாளர் களத்தாவூர் அழகேசன், திருச்சி வேங்கை ராஜா, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் பிரவீன் ராஜ், பரமக்குடி நகர் தலைவர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.மத்திய மாநில ஏசி எஸ்டி அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பாக மாநில தலைவர் கருப்பையா தலைமையில் மாநில துணைத்தலைவர் பாலச்சந்திரன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் மரியம் ஜேம்ஸ், டாஸ்மாக் மாநில தலைவர் செல்வகுமார், மாவட்ட தலைவர் கர்ணன், மாவட்ட துணைத் தலைவர் மோகன் குமார், மாவட்டச் செயலாளர் சேக்கிழார், மாவட்ட பொருளாளர் பாபு, இணைச் செயலாளர் வீரக்குமார், துணைச் செயலாளர் சக்திவேல், மாவட்ட செய்தி தொடர்பாளர் தங்கவேலு, துணை செய்தி தொடர்பாளர் சுரேஷ், பரமக்குடி வட்டார தலைவர் மாதவன், வட்டாரச் செயலாளர் பூப்பாண்டி, வட்டார பொருளாளர் ஆனந்த், வட்டார அமைப்பாளர் இளங்கோ உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். சங்கத்தின் சார்பாக நினைவு நாளிற்கு வருகை தந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் மாவட்ட செயலாளர் (மே)சேகர், திருப்பூர் மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர் பாக்கியாச்சாமி , பரமக்குடி நகர செயலாளர் முனியசாமி, இளைஞர் அணி செயலாளர் தர் ,மாவட்ட நிர்வாகி சுபா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மாவட்டச் செயலாளர் பாலுச்சாமி, மாநில செய்தி தொடர்பாளர் பிரகாஷ், மண்டல பொறுப்பாளர் கதிரேசன், பரமக்குடி நகர் செயலாளர் சிங்கராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

The post நினைவு நாளை முன்னிட்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Day of the Memorial Day of Martyr ,Emanuel Sakaran ,Dinakaran ,
× RELATED ஏர்வாடி, வாலிநோக்கம் பகுதிகளில்...