×

நெல்லை கூடங்குளம் அருகே கடலில் தரைதட்டிய கப்பல் 2 அல்லது 3 நாட்களில் மீட்கப்படும்: கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் விளக்கம்

நெல்லை: நெல்லை கூடங்குளம் அருகே கடலில் தரைதட்டிய கப்பல் 2 அல்லது 3 நாட்களில் மீட்கப்படும் என கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூடங்குளத்தில் ரஷ்ய தொழில்நுட்பத்தில் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் செயல்பட்டு வருகிறது. இதுதவிர 3 மற்றும் 4 ஆவது அணுஉலைகளுக்கான கட்டுமானப் பணிகள் முடிவுறும் நிலையிலும், 5 மற்றும் 6வது அணு உலைகளுக்கான பணிகள் முழுவீச்சிலும் நடந்து வருகிறது. இந்த 5 மற்றும் 6 அணு உலைகளுக்கான நீராவி ஜெனரேட்டர்கள் ரஷ்யாவில் இருந்து கப்பல் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது.

பின்னர் அங்கிருந்து மிதவை கப்பலில் ஏற்றப்பட்டு இழுவை கப்பல் மூலம் கடல் வழியாக இழுத்து வரப்பட்டது. இந்த மிதவை கப்பல் கூடங்குளம் அணுஉலை அருகே வந்தபோது இழுவைக் கப்பலில் இருந்து மிதவை கப்பலை இழுக்க பயன்படுத்தப்பட்ட கயிறு அறுந்து விட்டது. இதையடுத்து மிதவை கப்பல் கடல் அலையில் அந்தப் பகுதியில் கடலுக்கு அடியில் உள்ள பாறையில் தட்டி நின்றது. மிதவை கப்பலை மீட்கும் பணியில் இழுவைக் கப்பல் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நெல்லை கூடங்குளம் அருகே கடலில் தரைதட்டிய கப்பல் 2 அல்லது 3 நாட்களில் மீட்கப்படும் என கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 நாட்களாக கப்பலை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் மேலும் 3 நாட்கள் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டர்களை ஏற்றி வந்த இழுவை கப்பல் பாறை இடுக்குகளில் சிக்கியுள்ள நிலையில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. தரைதட்டி கடலில் நிற்கும் கப்பலால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூடங்குளம் அணுமின் நிலையம் தெரிவித்துள்ளது. மிதவை கப்பலில் உள்ள நீராவி உற்பத்தி ஜெனரேட்டர்கள் பாதுகாப்பாக உள்ளதாக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. கப்பலில் உள்ள ஜெனரேட்டரை வேறு கப்பலுக்கு மாற்றி கரைக்கு கொண்டு வரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

The post நெல்லை கூடங்குளம் அருகே கடலில் தரைதட்டிய கப்பல் 2 அல்லது 3 நாட்களில் மீட்கப்படும்: கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Nellai Kudankulam ,Kudankulam nuclear power plant ,Nellai ,Dinakaran ,
× RELATED கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் உற்பத்தி நிறுத்தம்..!!