×

கடமலை-மயிலை ஒன்றியத்தில் தீவிர ரோந்து பணியில் வனத்துறை அதிகாரிகள்

வருசநாடு, செப். 12: கடமலை-மயிலை ஒன்றியத்தில் புதிதாக நபர்கள் நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினர் விசாரித்து ரோந்து பணியினை தீவிரப்படுத்தி உள்ளனர். கடமலை – மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர், வருசநாடு, மேகமலை என மூன்று வனச்சரகம் உள்ளது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் எட்டு தனி படைகளை அமைத்து வனத்துறை தீவிர ரோந்து பணிகளில் உள்ளனர்.

மேலும் எஸ்டேட் தனியார் தோட்ட பகுதிகளில் புதிய நபர்கள் நடமாட்டம் உள்ளதா எனவும் தீவிர விசாரணையில் உள்ளனர். மேலும் மேகமலை வனப்பகுதி ,வருசநாடு பஞ்சந்தாங்கி மலைப் பகுதி, பிளவக்கல் மலைப்பகுதி வெள்ளி மலைப் பகுதி அரசரடி மலைப் பகுதியில் வனத்துறை சார்பில் ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த ரோந்து பணியின் போது கண்டமனூர், வருசநாடு, மேகமலை, உள்ளிட்ட அனைத்து வனச்சரகர்கள், வனவர்கள் வன காவலர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் உடன் இருந்தனர்.

The post கடமலை-மயிலை ஒன்றியத்தில் தீவிர ரோந்து பணியில் வனத்துறை அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Kadamalai-Mayalai ,Varusanadu ,Kadamalai-Mylai Union ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...