விருதுநகர், செப்.12: உ.பி சாமியாரை கண்டித்து விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் உ.பி சாமியாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை வைத்து கொலை மிரட்டல் விடுத்த உ.பி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யாவை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகி கவுதமன், நிர்வாகிகள் மூக்கம்மாள், அச்சப்பன் கண்டன உரையாற்றினர். நிர்வாகிகள் அனல்மணி, மாரியம்மாள், வேங்கையன், தங்கவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
The post ஆதித்தமிழர் பேரவை சார்பில் உ.பி சாமியாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
