×

தடகளப் போட்டியில் அவிநாசி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

 

அவிநாசி,செப்.12: குறுமைய அளவிலான தடகளப் போட்டியில், அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்தனர்.அவிநாசி குறுமைய அளவிலான தடகளப் போட்டிகள் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றன. 17, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 100, 200, 800 மீட்டர் ஓட்டப் பந்தயம், தொடர் ஓட்டம், உயரம், நீளம் தாண்டுல், தடை தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இதில் அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.இதில் மாணவர்கள் யாகவராஜ், விக்னேஷ்வரன், கமலேஷ், பிரதீப், ஆதித்தியன், யுவராஜ், தனுஷ், தாமோதரன், கவின் ஆகியோர் தங்கப் பதக்கமும், சஞ்சய்குமார், சுரேந்திரன், அப்பாஸ், சஞ்சய்குமார், கமலேஷ், விக்னேஷ்வரன், குருபிரசாத், ஆதித்தியன், பிரதீப் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், கவின், பிரதீப் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனைப் படைத்தனர்.

The post தடகளப் போட்டியில் அவிநாசி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Avinasi Govt School ,Avinasi ,Avinasi Govt Boys High School ,Avinasi… ,Dinakaran ,
× RELATED ரயிலில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல்