×

இமானுவேல் சேகரன் சிலைக்கு மரியாதை

 

கமுதி, செப்.12: கமுதி வெள்ளையாபுரத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, நேற்று அவரது திருவுருவ சிலைக்கு தேவேந்திரகுல இளைஞர் எழுச்சி பேரவை சார்பில், நிறுவனர் தளபதி ராஜ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் அதன் மாநிலத் தலைவர் குருநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வெள்ளையாபுரம் கிராம பொதுமக்கள் சார்பில், பொங்கல் வைத்து வழிபட்டனர்.

பின்னர் சிறுவர்,சிறுமியர் மற்றும் இளைஞர்கள் சிலம்பம் அறங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கிராமத் தலைவர் தர்மலிங்கம், வார்டு கவுன்சிலர் ஜோதிராஜா மற்றும் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் இமானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் ஏராளமான இளைஞர்கள், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.

The post இமானுவேல் சேகரன் சிலைக்கு மரியாதை appeared first on Dinakaran.

Tags : Emanuel Sekaran ,Kamudi ,Memorial Day ,Emmanuel Sekaran ,Kamudi Veliyapuram ,Dinakaran ,
× RELATED கமுதி மின்வாரிய அலுவலகத்தில் விஷபூச்சிகள் தொல்லை அதிகரிப்பு