பாலக்காடு,செப்.12: பாலக்காடு மாவட்டம் பருதூர் கிராமப் பஞ்சாயத்து நவீனப்படுத்திய புதிய அலுவலகத்தை கிராமப் பஞ்சாயத்து தலைவர் சக்கிரியா திறந்து வைத்தார். விழாவிற்கு துணைத்தலைவர் நிஷிதாதாஸ் தலைமைத் தாங்கினார். 2022-23 நிதியாண்டு திட்டத்தில் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் செலவீட்டில் கிராமப்பஞ்சாயத்து அலுவல புதிய கட்டடங்கள் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டிடத்தில் வேளாண் அலுவலகம், இன்ஜினீரிங் துறை அலுவலகம், தொழிற்வளர்ச்சித் துறை அலுவலகம் என தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டு அலுவல் பணிகள் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இவ்விழாவில் பருதூர் கிராமப்பஞ்சாயத்து செயற்குழு உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
The post பருதூர் கிராமப் பஞ்சாயத்தில் புதுப்பிக்கப்பட்ட அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.
