×

திருச்செந்தூர் பகுதியில் ரூ.24 லட்சத்தில் திட்டப்பணிகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்

உடன்குடி, செப். 12: திருச்செந்தூர் பகுதியில் ரூ.24 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.11.97 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தார். திருச்செந்தூர் யூனியனுக்குட்பட்ட பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா ஆகியவை நடந்தது. விழாவில் மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, வீரபாண்டியன்பட்டினம்(ரூரல்) பஞ். சண்முகபுரத்தில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சண்முகபுரம் காந்தி நகரில் ரூ.10 லட்சம் மதிப்பில் நியாயவிலை கடை அமைக்கவும், பள்ளிப்பத்து பஞ்சாயத்து செங்குழியில் ரூ.14 லட்சம் மதிப்பில் புதிய நூலக கட்டிடம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் ஆர்டிஓ குருச்சந்திரன், தாசில்தார் வாமனன், பிடிஓ அன்றோ, திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழிரமேஷ், கவுன்சிலர் செந்தில்குமார், நகர செயலாளர் வாள்சுடலை, ஆறுமுகநேரி பேரூராட்சி துணை தலைவர் கல்யாணசுந்தரம், காயாமொழி பஞ். தலைவர் ராஜேஸ்வரன், அரசு வக்கீல் சாத்ராக், காயல்பட்டினம் நகராட்சி கவுன்சிலர் சுகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருச்செந்தூர் பகுதியில் ரூ.24 லட்சத்தில் திட்டப்பணிகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Anita Radhakrishnan ,Tiruchendur ,Udengudi ,Anitha Radhakrishnan ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை