×

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்

கறம்பக்குடி, செப்.12: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கறம்பவிடுதி ஊராட்சியில் உள்ள விளாரிப்பட்டி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சுகந்தி தலைமை வகித்தார். கட்சியின் ஒன்றிய செயலாளர் சேசுராஜ் கலந்து கொண்டு மாவட்ட குழு முடிவுகளை விளக்கி கூறினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நாளை (புதன்கிழமை) நடைபெறும் நாடு தழுவிய மறியல் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொள்வது என்றும் விளாரிப்பட்டி கிராமத்தில் உள்ள 40 குடும்பங்களுக்கு மேல் குடிதண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அதனை கறம்பக்குடி ஒன்றிய ஆணையர் உடனடியாக சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. முடிவில் சிவஜோதி நன்றி கூறினார்.

The post இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Communist Party of India ,Karambakudi ,Villaripatti ,Karambavidhu Panchayat ,Pudukottai District Karambakudi ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை