×

கோவில்பாளையம் – தேனூர் கிராமத்தில் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

குன்னம், செப். 12: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் துங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தேனூர் – கோவில்பாளையம் கிராமத்தில் சக்தி சித்தி விநாயகர், சுப்பிரமணியர் நல்ல சேவகர் அய்யனார், செம்மலயபர், ஆகாசகருப்ப, கருப்புசாமி, மதுரைவீரன், காரடையான் சங்கிலி கருப்பு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கோபுரங்கள் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதை முன்னிட்டு கடந்த 10ம் தேதி விநாயகர் பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கி முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இரண்டாம் நாள் விநாயகர் பூஜை, வருண பூஜை. அஷ்டபந்தனம், பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று விநாயகர் பூஜை, திராவிய குதி மற்றும் தீபாரதனையுடன் யாகசாலை பூஜை நிறைவு பெற்றது. பிறகு பூர்ணாகதியும் நடைபெற்றது. மேலும் மங்கள வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளம் முழங்க யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதனையடுத்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர விமானத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனையடுத்து மூலவர் சுவாமிகளுக்கு புனிதநீர் ஊற்றி மஹா தீபாரதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் துங்கபுரம், புது வேட்டக்குடி, காரைப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். குன்னம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

The post கோவில்பாளையம் – தேனூர் கிராமத்தில் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Kovilpalayam ,Ayyanar temple ,Thenur ,Kovilpalayam village ,Tunkapuram Panchayat of ,Kunnam District, Perambalur District… ,
× RELATED வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்க...