×

காலை உணவு திட்டத்திற்கு பணியாளர் மாற்றம் கருப்பு கொடி ஏந்தி பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் : வருவாய் துறை சமரசம்

பொன்னேரி: பொன்னேரி அடுத்த ஆவூர் ஊராட்சிக்கு உட்பட்ட, வேம்பேடு அரசு பள்ளியில் காலை உணவு திட்டத்திற்கு சேர்த்த மகளிரை மாற்றி, புதிய மகளிர் வைத்ததால் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், ஆவூர் ஊராட்சிக்குட்பட்ட வேம்பேடு கிராமத்தில் வசிப்பவர் ராசாத்தி. கடந்த 6 மாதத்திற்கு முன்பு அரசு பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்டத்திற்காக வேம்பேடு அரசினர் உதவி தொடக்கப்பள்ளியில் பணி செய்வதற்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியிலிருந்து பணி செய்தும் வருகிறார்.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் நந்தினி மூர்த்தி என்பவர் ராசாத்திக்கு நியமனம் செய்த பணி நியமன ஆணையை ரத்து செய்து வேறு ஒரு நபருக்கு பணி அமர்த்துமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பேரில், காலை உணவு திட்டத்திற்கு பணி செய்து வந்த ராசாத்தியை மாற்றிவிட்டு வேறு ஒரு நபரை பணி அமர்த்தி நேற்று பணி செய்வதற்காக அவரை வரவழைத்துள்ளனர்.

இதனை அறிந்து ராசாத்தி மற்றும் அவரது உறவினர்கள் அந்த கிராம மக்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கேள்விப்பட்டதும் பொன்னோரி தாசில்தார் மதிவாணன் சம்ப இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இதில், வேலை செய்து வந்த ராசாத்தி தொடர்ந்து பணி செய்ய வேண்டும். இந்த பிரச்னை குறித்து துறை ரிதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

The post காலை உணவு திட்டத்திற்கு பணியாளர் மாற்றம் கருப்பு கொடி ஏந்தி பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் : வருவாய் துறை சமரசம் appeared first on Dinakaran.

Tags : Revenue Department ,Ponneri ,Vembedu Government School ,Aaur Panchayat ,
× RELATED புதுச்சேரி அடுத்த சேதராபட்டு...