×

இது புதுசா இருக்கு அண்ணே.. புதுசா இருக்கு… உடன்கட்டை ஏறுதலுக்கு அண்ணாமலை புதிய விளக்கம்: சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல்

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்று சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் சென்னை, நுங்கம்பாக்கத்தில் பாஜ தலைவர் அண்ணாலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்பின்னர் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியிருப்பதாவது: சனாதன தர்மம் எப்போதும், யாருக்கும் எதிரி கிடையாது.மேலும், உடன்கட்டை ஏறும் வழக்கம் என்பது சனாதன தர்மத்தில் இல்லை. ஆங்கிலேய படையெடுப்பின்போது ஒரு வீரர் கொல்லப்பட்டால் அவரின் மனைவியை வெற்றி பெறுபவர்கள் பரிசுப் பொருளாக எடுத்துச் சென்றுவிடுவர். இதன் காரணமாக அந்த பெண் தன் கற்பை காப்பாற்றிக் கொள்வதற்காக தொடங்கப்பட்ட நிகழ்வுதான் உடன்கட்டை ஏறுதல். அதனால் உடன் கட்டை ஏறுதல் என்பது சனாதன தர்மத்தில் இல்லை என கூறுகிறோம் என்றார்.

அதன்படி, அண்ணாமலை பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. குறிப்பாக, பெண்கள் தங்களின் கற்பை காப்பாற்றி கொள்ள தான் உடன்கட்டை ஏறியதாக அண்ணாமலை தெரிவித்துள்ள நிலையில், கணவன் இறந்த பின் வலியுறுத்தல் காரணமாக பெண்கஙள உடன்கட்டை ஏறும்படி வலியுறுத்தப்படுவார். அந்தவகையில் இது போன்ற சதி ஒழிப்புக்கு எதிராக ராஜாராம் மோகன்ராய் உள்ளிட்ட சீர்திருத்தவாதிகளின் முயற்சியால் பெண்களுக்கான பல்வேறு உரிமைகள் கிடைத்துள்ளது. அதனை பெண்களின் கற்புடன் ஒப்பிட்டு, கற்பை காப்பாற்றி கொள்ள தங்களுக்கு தாங்களே உடன்கட்டை ஏறுவதுபோல பெண் அடிமை மனபாவம் கொண்டவரால்தான் இதுபோன்ற விளக்கத்தை கொடுக்க முடியும் என்று அண்ணாமலையை நெடிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

* அண்ணாமலை உள்பட 800 பேர் மீது வழக்கு
சனாதன சர்ச்சை விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி சென்னையில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடந்தது. அப்போது பாஜவினர் அறநிலையத்துறை அலுவலகத்ைத முற்றுகையிடுவதாக புறப்பட்டு சென்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அண்ணாமலை உள்பட அனைவரும் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அண்ணாமலை உள்பட 800 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

The post இது புதுசா இருக்கு அண்ணே.. புதுசா இருக்கு… உடன்கட்டை ஏறுதலுக்கு அண்ணாமலை புதிய விளக்கம்: சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் appeared first on Dinakaran.

Tags : Puduza ,Anamalai ,Chennai ,Minister ,Udhayanidi Stalin ,Mosquito ,Dengue Fever ,Malaria ,Corona ,
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...