×

இந்திய உணவு கழகத்தின் மூலம் 1.66 லட்சம் டன் கோதுமை, 11 ஆயிரம் டன் அரிசி விற்பனை

புதுடெல்லி: இந்திய உணவு கழகம் 1.66 லட்சம் டன் கோதுமை, 11,000 டன் அரிசி மின்னணு ஏலத்தில் வெளிச்சந்தையில் விற்பனை செய்துள்ளது. அரிசி, கோதுமை மற்றும் ஆட்டா ஆகியவற்றின் சில்லறை விலையைக் கட்டுப்படுத்துவதற்காக ஒன்றிய அரசு பல நடவடிக்கைகள் எடுது்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்திய உணவு கழகத்தின்(எப்சிஐ) மூலம் கோதுமை மற்றும் அரிசி வாரந்தோறும் மின்னணு ஏலங்கள் நடத்தப்படுகிறது. இதுகுறித்து எப்சிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டிற்கான 11வது மின்னணு ஏலம் கடந்த 6ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் உள்ள 500 கிடங்குகளில் இருந்து 2 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 337 கிடங்குகளில் இருந்து 4.89 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் வழங்கப்பட்டன.

மின்னணு ஏலத்தில், 1.66 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 17 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியும் விற்பனை செய்யப்பட்டன. இருப்பு விலையான ரூ. 2150வுக்கு எதிராக, கோதுமை, குவின்டால் ஒன்றுக்கு ரூ.2169.65 ஆகவும், தளர்வு செய்யப்பட்ட குறியீட்டின் அடிப்படையிலான கோதுமையின் எடையிடப்பட்ட சராசரி விற்பனை விலை குவின்டால் ஒன்றுக்கு ரூ. 2150.86 ஆகவும் (இருப்பு விலை ரூ. 2125)விற்பனை ஆனது.நாடு முழுவதும் அரிசியின் விலை ரூ.2956.19 ஆகவும், இருப்பு விலை ரூ.2952.27 விற்பனை ஆனது என தெரிவித்துள்ளது.

The post இந்திய உணவு கழகத்தின் மூலம் 1.66 லட்சம் டன் கோதுமை, 11 ஆயிரம் டன் அரிசி விற்பனை appeared first on Dinakaran.

Tags : Indian Food Corporation ,NEW DELHI ,Dinakaraan ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி