×

ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர்

ஹீரோ நிறுவனம், புதிய கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. அறிமுகச் சலுகையுடன் ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.73 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு ரூ.1.83 லட்சமாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில் 210 சிசி லிக்விட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், அதிகபட்சமாக 9,250 ஆர்பிஎம்-ல் 25.5 எச்பி பவரையும், 7,250 ஆர்பிஎம்-ல் 20.4 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய விண்ட் ஸ்கிரீன் , எல்சிடி டேஷ்போர்டு , புளூடூத் இணைப்பு, நேவிகேஷன் வசதி ஆகியவை உள்ளன. யமஹா ஆர்15வி4, சுசூகி ஜிக்சர் எஸ்எப்250, பல்சார் ஆர்எஸ்200, கேடிஎம் ஆர்சி 200 ஆகியவற்றுக்கு இது போட்டியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் appeared first on Dinakaran.

Tags : Hero ,Dinakaran ,
× RELATED ஹீரோவுடன் இணைந்து குறைந்தவிலை பைக்...