×

மிரட்டும் டெங்கு!: தமிழ்நாடு முழுவதும் 21,695 பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 21,695 பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; ஜனவரி மாதத்தில் இருந்து நேற்று வரை 253 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது; மூவர் உயிரிழந்துள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளுடன் கொசு ஒழிப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெங்கு பாதிப்பு தொடர்பாக நாளை தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ரூ.1.50 கோடி செலவில் புற்றுநோய் மருத்துவமனையில் தங்கும் விடுதி அமைக்கப்பட உள்ளது; பட்டுக்கோட்டையில் பிரசவத்தின் போது வீட்டில் பெண் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கூறினார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால், டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

The post மிரட்டும் டெங்கு!: தமிழ்நாடு முழுவதும் 21,695 பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Ma. Subharamanyan ,Chennai ,Maharashi ,Supremanian ,Dengue ,Ma ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...