×

டெல்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழா; மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது: குடியரசு தலைவர், பிரதமர் பங்கேற்பு

டெல்லி: டெல்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துக் கொண்டு விருது வழங்கி வருகிறார். பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்வில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். * மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது * சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது * தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகி கிருஷ்ணம்மாள் உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருது * பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருது* நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருது * அருண்ஜெட்லிக்கான பத்ம விபூஷண் விருதை அவரது மனைவி பெற்றுக்கொண்டார். * மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் பத்மஸ்ரீ விருது* டாக்டர் ராமன் கங்காகேத்கர், முன்னாள் தலைமை விஞ்ஞானி பத்மஸ்ரீ விருது * பாடகர் அட்னான் சாமி பத்மஸ்ரீ விருது * பிரபல ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் பண்டிட் சன்னுலால் மிஸ்ரா பத்ம விபூஷன் விருது* ஏர் மார்ஷல் டாக்டர் பத்மா பந்தோபாத்யாய் மருத்துவ துறையில் பத்மஸ்ரீ விருது.* முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு பத்ம விபூஷன் விருது…

The post டெல்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழா; மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது: குடியரசு தலைவர், பிரதமர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Padma Awards Ceremony ,Delhi ,S.B.P. ,President ,President of the Republic ,
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!