×

தண்டராம்பட்டு அருகே பரபரப்பு கல் குவாரியை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை

*லாரிகள் சிறைபிடிப்பு

தண்டராம்பட்டு : தண்டராம்பட்டு அருகே கல்குவாரியை மூட வலியுறுத்தி பொதுமக்கள் குவாரியை முற்றுகையிட்டு லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தண்டராம்பட்டு அடுத்த வரகூர் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான 15 ஏக்கர் தரிசுநிலம் உள்ளது. இந்த இடத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் மட்டும் கற்களை வெட்டி எடுத்துக்கொள்ள கனிமவளத்துறை சார்பில் ஏலம் விடப்பட்டது. ஆனால் குத்தகை எடுத்த 3 பேர், விதியை மீறி அதிகமான பரப்பளவிலும், அதிக ஆழத்திலும் பலகோடி மதிப்பிலான கற்களை வெட்டி எடுத்துள்ளனர்.

இந்நிலையில் கல்குவாரி இயங்க எதிர்ப்பு தெரிவித்து அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று கல்குவாரியை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு வந்த 2 லாரிகளை, பாதையில் கற்களை வைத்து சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

கல் குவாரியில் பாறைகள் உடைப்பதால் அதிகளவு புகையும், பயங்கர அதிர்வும் ஏற்படுகிறது. இதில் இருந்து வெளியேறும் தூசு நிலத்தில் அதிகளவு படிந்து விடுகிறது. இதில் 250 அடிக்கு மேல் ஆழமாக தோண்டி கற்களை எடுப்பதால் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர் வற்றி காணப்படுகிறது.

இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிர் செய்ய முடியவில்லை. மேலும், அனுமதி அளித்ததை விட கூடுதலாக கற்கள் வெட்டி எடுப்பதற்காக இரவு நேரங்களில் பாறைகள் உடைப்பதால் வீடுகள் அதிர்கிறது. தூங்கவும் முடியவில்லை. எனவே இந்த கல்குவாரியை மூடவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி ெதாடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post தண்டராம்பட்டு அருகே பரபரப்பு கல் குவாரியை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Thandaramptu ,Thandarrampattu ,
× RELATED வீடு புகுந்து மூதாட்டி காதை அறுத்து 8...