×

யூதர்களின் புத்தாண்டை ஒட்டி ஜெருசலேம் நகரில் உள்ள மேற்குச்சுவரில் வைக்கும் வேண்டுதல் குறிப்புத் தாள் சேகரிக்கும் பணி தீவிரம்..!!

ஜெருசலேம்: ஜெருசலேம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற மேற்குச்சுவரில் யூதர்கள் வைக்கும் வேண்டுதல்கள் குறிப்பு தாள்களை சேகரிக்கும் பணி நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த 70-வது ஆண்டில் ஜெருசலேம் நகரில் இருந்த மிகப்பெரிய இரண்டாவது யூத ஆலயம் இடிக்கப்பட்டது. அந்த ஆலயத்தின் மிச்சமாக உள்ள மேற்குச்சுவர் அல்லது அழுகைசுவரின் இடுக்குகளில் யூதர்கள் வேண்டுதல் குறிப்புகளை எழுதி செருகி வைப்பது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இந்த சுவரில் தங்களின் தலையை முட்டி யூதர்கள் பிராத்தனை மேற்கொள்வதால் அழுகைசுவர் என்றும் அழைக்கப்படுகிறது.

தங்கள் வேண்டுதலுக்கான விண்ணப்ப குறிப்புகளை கடவுள் படித்தறிந்து நிறைவேற்றுவார் என்பது யூதர்களின் நம்பிக்கையாகும். குறிப்பாக நாட்டின் அமைதிக்காக வேண்டி யூதர்களின் குறிப்புகளை எழுதி சுவரின் பிளவுகளில் செருகி விட்டு செல்வர். மற்ற யூதர்களும் வேண்டுதல் குறிப்பை எழுதிவைக்க வசதியாக ஆண்டுக்கு இரண்டு முறை இந்த சுவர் சுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் யூதர்களின் புத்தாண்டை முன்னிட்டு மேற்குச்சுவரை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. சேகரிக்கப்படும் வேண்டுதல் குறிப்பு தாள்கள் ஒரு அறையில் பாதுகாக்கப்படும். பின்னர் சிறப்பு நிகழ்வு ஒன்றில் அவை அனைத்தும் புதைக்கப்படும்.

The post யூதர்களின் புத்தாண்டை ஒட்டி ஜெருசலேம் நகரில் உள்ள மேற்குச்சுவரில் வைக்கும் வேண்டுதல் குறிப்புத் தாள் சேகரிக்கும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Western Wall ,Jerusalem ,New Year ,
× RELATED காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர...