×

தமிழர் மெய்யியல் மரபை போற்றிய மாமன்னன் நந்தனை கீழ்சாதி என குறிப்பிட்ட அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்: விசிக எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன் கண்டனம்

சென்னை: தமிழர் மெய்யியல் மரபை போற்றிய மாமன்னன் நந்தனை கீழ்சாதி என குறிப்பிட்ட அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், திருப்புன்கூர் என்ற ஊருக்கு சென்றால் இன்றும் கூட அங்கே உள்ள கோயிலில் நந்தியின் சிலை சற்று விலகி இருக்கும். இதை எல்லோரும் பார்க்க முடியும்.

அங்கே கீழ் ஜாதியை சேர்ந்த ஒருவருக்கு சிவனை பார்க்க அனுமதி இல்லை என்று சொன்னதால், நந்தியை சற்று விலகச்சொல்லி சிவன் காட்சியளித்த தர்மம் நம்முடைய சனாதனம். இதை பல கோவில்களில் நாம் பார்க்கிறோம் என்று அண்ணாமலை கூறி உள்ளார். அண்ணாமலையின் இந்த பேச்சை பலரும் விமர்சனம் செய்துள்ளனர். கீழ் ஜாதி என்ற அவரின் வார்த்தை பிரயோகம் கடுமையான விவாதங்களையும், விமர்சனங்களையும் சந்தித்துள்ளது.

இந்நிலையில், தமிழர் மெய்யியல் மரபை போற்றிய மாமன்னன் நந்தனை கீழ்சாதி என குறிப்பிட்ட அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார். பிறப்பின் அடிப்படையில் மேல் கீழ் என ஏற்றத்தாழ்வுகளை கட்டமைத்தது யார்? இந்த மண்ணின் பூர்வகுடிகளை கீழ் சாதி என அருவருப்பாய் சொல்ல அண்ணாமலைக்கு ஆணவம் வந்தது எப்படி? இனியும் எவ்வளவு காலம் பொறுத்துக்கொண்டிருப்பது என்று சிந்தனை செல்வன் கடுமையாக சாடியுள்ளார்.

The post தமிழர் மெய்யியல் மரபை போற்றிய மாமன்னன் நந்தனை கீழ்சாதி என குறிப்பிட்ட அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்: விசிக எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Mamannan Nandan ,Chantiva Selvan ,Chennai ,Annamala ,
× RELATED பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை...