×

மனித உரிமைகளை மதிக்க மோடியிடம் பைடன் வலியுறுத்தல்

ஹனோய்: வியட்நாம் தலைநகரில் ஹனோயில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: ஜி 20 உச்சி மாநாட்டை நடத்திய இந்திய பிரதமர் மோடியின் தலைமை மற்றும் விருந்தோம்பலுக்காக நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி வெள்ளை மாளிகை வந்ததை தொடர்ந்து இருநாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தோம்.

எப்போதும் போல, மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், வளமான இந்தியாவை கட்டியெழுப்புவதில் பொதுமக்கள் மற்றும் சுதந்திரமான ஊடகங்களுக்கு உள்ள முக்கிய பங்கை நான் மோடியிடம் எடுத்துக் கூறினேன். இவ்வாறு பைடன் கூறினார்.

 

The post மனித உரிமைகளை மதிக்க மோடியிடம் பைடன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Bidan ,Modi ,Hanoi ,Vietnam ,US ,President ,Joe Biden ,G20 ,Dinakaran ,
× RELATED நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி