×

ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்று: மழையால் நிறுத்தப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நாளை தொடரும் என அறிவிப்பு

கொழும்பு: ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் மழையால் நிறுத்தப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நாளை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா – சுப்மன் கில் ஜோடி அதிரடியான தொடக்கத்தை தந்தது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.

கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷதாப் கான் பந்துவீச்சில் அவுட் ஆனார். அவரையடுத்து சுப்மன் கில் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷஹீன் அப்ரிடி பந்துவீச்சில் அவுட் ஆனார். இவர்களின் விக்கெட்டை தொடர்ந்து விராட் கோலி – ராகுல் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.

அப்போது இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், திடீரென மழை பெய்ய தொடங்கியது. 4.55 மணிக்கு மழை பெய்ய தொடங்கிய நிலையில், உடனடியாக மைதானத்தின் மூடப்பட்டது.

ஆட்டம் 9 மணிக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8.45 மணியளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால் நடுவர்கள் இன்றைய நாளிற்கான ஆட்டம் ரிசர்வ் டேவுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தனர். இதனால் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்று: மழையால் நிறுத்தப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நாளை தொடரும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Asiakkop ,Super 4 Round ,India ,Pakistan ,Colombo ,Asiakop ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!