×

ஜி-20 டெல்லி கூட்டு பிரகடனத்தில் பெருமைப்பட ஒன்றுமில்லை: போர் பற்றிய பிரகடனத்தில் ரஷ்யாவின் பெயர் குறிப்பிடபடாதது குறித்து உக்ரைன் விமர்சனம்

டெல்லி: ஜி-20 நாடுகளின் கூட்டு பிரகடனத்தில் பெறுமைபடுவதற்கு ஒன்றும் இல்லை என்று உக்ரைன் கடுமையாக விமர்சித்துள்ளது. டெல்லியில் ஜி-20 அமைப்பின் 18-வது உச்சி மாநாட்டில் 37 பக்கங்களை கொண்ட டெல்லி பிரகடனம் இந்திய பிரதமர் மோடியால் முன் மொழியபட்டது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்தை பகிர்ந்து கொள்வது என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும் என அந்த பிரகடனத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் உலகம் முழுவது நடைபெறும் போர்கள் நாடுகளுக்கிடையேயான ஏற்பாடும் முரண்பாடுகளால் ஏற்படும் தாக்கங்கள் என்றும் மற்றும் ம் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆழ்ந்த கவலையும் தெரிவிக்கபட்டது. டெல்லி பிரகடனத்தை அனைத்து நாடுகளின் தலைவர்களும் ஏற்றுகொண்டிருக்கும் நிலையில் உக்ரைன் அதிர்ப்தி தெரிவித்துள்ளது.

கூட்டு பிரகடனத்தின் ஸ்க்ரீன் ஷாட்டை தனது எக்ஸ் சமுக வளைதளத்தில் பகிர்ந்துள்ள உக்ரன் நாட்டு வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் ஓலெக் நிகோலென்கோ உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு ஜி-20 பிரகடனத்தில் பெயரளவில் கூட கண்டனம் தெரிவிக்கபடவில்லை என்றார். ஜி-20 பிரகடனத்தில் பெறுமைபடுவதற்கு ஒன்றுமில்லை என்று விமர்சித்த அவர் போர் பற்றிய பிரகடனத்தின் பகுதியில் ரஷ்யாவின் பெயரை கூட குறிப்பிடுவது தவிற்கபட்டிருப்பதாக தெரிவித்து, அந்த பகுதிகளை சிவப்பு மை கொண்டு சுட்டிக்காட்டியுள்ளார்.

The post ஜி-20 டெல்லி கூட்டு பிரகடனத்தில் பெருமைப்பட ஒன்றுமில்லை: போர் பற்றிய பிரகடனத்தில் ரஷ்யாவின் பெயர் குறிப்பிடபடாதது குறித்து உக்ரைன் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Russia ,Delhi ,G-20 ,G ,Dinakaran ,
× RELATED உக்ரைன் டிரோன் தாக்குதலில் ரஷ்யாவின் நவீன போர் விமானம் சேதம்