×

சந்திரயான் 2 ஆர்ப்பிட்டரின் ரேடார் எடுத்த சந்திரயான் 3 விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ!

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான் 2 ஆர்ப்பிட்டரின் ரேடார் எடுத்த சந்திரயான் 3 விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டரை படம் பிடித்து சந்திரயான் 2 ஆர்பிட்டர் அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் 14ம் தேதி விண்ணுக்கு அனுப்பியது.

இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக கடந்த 23ம் தேதி மாலை 6.4 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. அதிலிருந்து பிரிந்து சென்ற ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணியில் ஈடுபட்டது. நிலவின் தென்பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை இருப்பதை கண்டறிந்துள்ளது. மேலும், நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டர் உறுதி செய்தது.

பிரக்யான் ரோவர் தனது பணிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு Sleep mode-க்கு சென்றது. பிரக்யான் ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் உறங்க வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் செப்டம்பர் 22ம் தேதி மீண்டும் செயல்பட துவங்கும் எனவும் இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சந்திரயான் 2 ஆர்ப்பிட்டரின் ரேடார் எடுத்த சந்திரயான் 3 விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. கடந்த 6ம் தேதி நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை படம் பிடித்து சந்திரயான் 2 ஆர்பிட்டர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவை சுற்றி வரும் சந்திரயான் 2 ஆர்பிட்டர் தொடர்ந்து சிறப்பாக இயங்கி வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

The post சந்திரயான் 2 ஆர்ப்பிட்டரின் ரேடார் எடுத்த சந்திரயான் 3 விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ! appeared first on Dinakaran.

Tags : isro ,chandrayan ,Srihrikota ,Chandrayaan ,Vikram Lander ,Arthur ,Chandrayan 2 ,Arthur Isro ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...