×

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி கோயிலில் 12ம் தேதி திருமஞ்சனம்; 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 12ம்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 18ம்தேதி முதல் 26ம்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, கோயிலை தூய்மை செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் வரும் 12ம் தேதி (செவ்வாய்) நடைபெற உள்ளது.

அன்று அதிகாலை பூஜைகளுக்குபின் காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயில் முழுவதும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்படும். தொடர்ந்து பல்வேறு வாசனை திரவியங்கள் கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும். இதனால் அன்று சுமார் 5 மணி நேரம் வரை பக்தர்கள் இலவச தரிசனம் உள்பட அனைத்து தரிசனமும் நிறுத்தப்படும். இதையடுத்து 11 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

வருண யாகம்
நாடு முழுவதும் மழை பெய்ய வேண்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில், திருப்பதி அடுத்த நிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நிவாச அஷ்டோத்தர மகாசாந்தி வருண யாகம் நேற்று அங்குரார்பணத்துடன் தொடங்கியது. இதில் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் நலன் கருதி இந்த யாகம் தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படுகிறது. இதுபோன்ற யாகம் கடந்த காலங்களில் நடந்ததில்லை. ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களை சேர்ந்த அர்ச்சகர்கள், 60க்கும் மேற்பட்ட வைகானச பண்டிதர்கள், 30க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள், 215க்கும் மேற்பட்ட ருத்விக்கள் இந்த யாகத்தை நடத்துகிறார்கள். இந்த யாகத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. அலிபிரி நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு வன விலங்குகளிடம் இருந்து தற்காத்து கொள்வதற்காக கைத்தடி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், வாரிமெட்டு பாதையில் செல்லும் பக்தர்களுக்கும் விரைவில் கைத்தடி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ3.63 ேகாடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயில் நேற்று 68,021 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 31,047 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ3.63 ேகாடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள ஏடிஜி காட்டேஜ் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

The post பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி கோயிலில் 12ம் தேதி திருமஞ்சனம்; 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Tirupati Temple ,Brahmoorsavam ,Tirumalai ,Tirupati ,Ethumalayan ,Temple ,Mdhethi ,Aaluvar ,Tiramarchanjana ,12th ,Thirupati Temple ,
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்