×

தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதியில் 70 யானைகள் முகாம்-விவசாயிகள் பீதி

தேன்கனிக்கோட்டை :  தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதியில் ஒரே நேரத்தில் 70 யானைகள் முகாமிட்டுள்ளது விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக வனப்பகுதியிலிருந்து வந்து 70க்கும் மேற்பட்ட யானைகள் ஜவளகிரி வனப்பகுதியில் மூன்று பிரிவுகளாக பிரிந்து முகமிட்டுள்ளன. தேன்கனிக்கோட்டை, ஓசூர் பகுதியில் ராகி பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டம் தேன்கனிக்கோட்டை, ஓசூர் பகுதியை நோக்கி வர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதியில் 70 யானைகள் முகாம்-விவசாயிகள் பீதி appeared first on Dinakaran.

Tags : Javalagiri forest ,Dhenkanikottai ,Karnataka forest… ,Dinakaran ,
× RELATED தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் உரசி யானை உயிரிழப்பு