×

ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது: பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தம்

ஆந்திரா: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை ஊழல் வழக்கில் போலீஸ் கைது செய்தது. முதலமைச்சராக இருந்தபோது வெளிநாடு செல்வதற்கான பணத்தில் முறைகேடு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு சந்திரபாபு நாயுடுவின் முகாம் அலுவலகத்தில் போலீசார் குவிந்தனர். ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் விசாரணை நடைபெற்ற நிலையில் சந்திரபாபு நாயுடுவை போலீசார் இன்று கைது செய்தனர். நந்த்யால் பகுதி போலீஸ் டிஐஜி தலைமையில் அதிக அளவிலான போலீசார் இன்று அதிகாலை 3 மணிக்கு சந்திரபாபுவை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால், சந்திரபாபு வீட்டின் முன் கூடியிருந்த தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதேபோல், சந்திரபாபு நாயுடு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவின் பாதுகாப்பில் உள்ளதால் சட்டப்படி அதிகாலை 5.30 மணிவரை அவரை அழைத்து செல்ல அனுமதிக்க முடியாது என்று எஸ்பிஜி படைப்பிரிவினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காத்திருந்த போலீசார், சந்திரபாபு நாயுடுவை காலை 6 மணிக்கு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு விஜயவாடா அழைத்து செல்லப்பட்டார். ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது: பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : AP ,Chief Minister ,Chandrababu Naidu ,Anangangangay ,Andhra Pradesh ,Chief Minister of ,Chief Minister of State ,Chandrapabu Naidu ,Ankang ,
× RELATED சொல்லிட்டாங்க…