×

திமுக பாக முகவர்கள் கூட்டம் குமரன்குன்று பகுதியில் கலைஞர் சிலை, நூலகம் அமைக்க நீலகிரி எம்.பி. ராசா நேரில் ஆய்வு

மேட்டுப்பாளையம்: கலைஞரின் நூற்றாண்டு விழாவினையொட்டி காரமடை குமரன்குன்று பகுதியில் உள்ள டிஆர்எஸ் விஐபி சிட்டியில் சுமார் 4 சென்ட் நிலத்தில் கலைஞர் சிலை மற்றும் நூலகம் அமைய உள்ளது. இதற்கான இடத்தினை நீலகிரி எம்.பி.யும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கலைஞரின் சிலை அமைய உள்ள இடம், நூலகம் அமைய உள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தார். அப்போது, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.சண்முகசுந்தரம், அஷ்ரப் அலி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நவீன்,பிரஸ் சிவக்குமார், பூர்ணிமா, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ராமுக்குட்டி, மேட்டுப்பாளையம் நகர செயலாளர்கள் முகமது யூனூஸ், முனுசாமி, சிறுமுகை பேரூர் கழகச்செயலாளர் உதயகுமார், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மனோகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

The post திமுக பாக முகவர்கள் கூட்டம் குமரன்குன்று பகுதியில் கலைஞர் சிலை, நூலகம் அமைக்க நீலகிரி எம்.பி. ராசா நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : DMK ,Nilgiris ,Kumarankunnu ,Rasa ,Mettupalayam ,DRS ,VIP City ,Karamadai ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு...