×

குற்றவாளிகளின் நோக்கம் அறிந்து சைபர் பாதுகாப்பை மாற்றி அமைக்க வேண்டும்: கேரள உளவுத்துறை ஏடிஜிபி பேச்சு

சென்னை: சைபர் குற்றவாளிகளின் நோக்கங்களை அறிந்து அதற்கு ஏற்றப்படி சைபர் பாதுகாப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்று கேரள மாநில உளவுத்துறை கூடுதல் டிஜிபி மனோஜ் ஆபிரகாம் தெரிவித்தார். சென்னை கிண்டியில் ஐஎஸ்ஏசிஏ என்ற தனியார் அமைப்பு சார்பில் ‘தொழில்நுட்ப ஸ்பிரிண்ட்ஸ்… பாதுகாப்பு சுறுசுறுப்பானதா’ என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. இதை கேரள உளவுத்துறை ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாம் தொடங்கி வைத்து பேசியதாவது:

சைபர் பாதுகாப்பு என்பது, ஒரு பின் சிந்தனையாக இருக்கக்கூடாது, ஆனால் எந்தவொரு பாதுகாப்பும் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும். சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் தாங்கள் பாதுகாப்புக்கு தொழில்நுட்பத்தைப் போலவே சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சைபர் செக்யூரிட்டி தற்போது உள்ள சூழலுக்கு ஏற்ப, உருவாகி வரும் சவால்களை திறம்பட மாற்றியமைக்கும் வகையில் இருக்க வேண்டும். சைபர் குற்றவாளிகளின் நோக்கங்களை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றப்படி சைபர் பாதுகாப்பை நாம் மாற்றி அமைக்க வேண்டும். நாட்டில் தற்போது சைபர் குற்றவாளிகள் அதிகளவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை சமாளிக்கும் வகையில் நாம் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post குற்றவாளிகளின் நோக்கம் அறிந்து சைபர் பாதுகாப்பை மாற்றி அமைக்க வேண்டும்: கேரள உளவுத்துறை ஏடிஜிபி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Kerala ,ADGB ,Chennai ,Kerala Intelligence ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...