×

வரலாறு காணாத மழை வெள்ளத்தில் மிதக்கிறது ஹாங்காங்

ஹாங்காங்: ஹாங்காங்கில் பெய்த கனமழையினால் நகரின் தெருக்கள் மற்றும் சுரங்கப்பாதை நிலையங்கள் வெள்ள நீரில் மூழ்கின. இதனால் பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. நகரின் வெவ்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் மிதந்து வந்த 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தீயணைப்பு படையினர் 110 பேரை பத்திரமாக மீட்டு வேறு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். மேலும், காயமடைந்த 20 பேரை மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த புதன்கிழமை இரவு 11 மணி முதல் 12 மணி வரையிலான, ஒரு மணி நேரத்தில் மட்டும் 158.1 மி.மீ. மழை பெய்துள்ளது. இது கடந்த 139 ஆண்டுகளில், ஒரு மணி நேரத்தில் பெய்த அதிகளவு மழையாகும்.

The post வரலாறு காணாத மழை வெள்ளத்தில் மிதக்கிறது ஹாங்காங் appeared first on Dinakaran.

Tags : Hong Kong ,
× RELATED ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!