×

நெற்றியில் ஏன் திலகம் அணிகிறோம்?

நெற்றியில் ஏன் திலகம் அணிகிறோம்?
– அப்பண்ணா, செங்கை.

ஆன்ம ஞானத்திற்கு, ஞானக்கண் திறக்க வேண்டும். இதை நினைவுறுத்தவே நாம் நெற்றியில் திலகம் அணிகிறோம். விஞ்ஞானப்படி சந்தனம் குளுமையை அளிப்பது, விபூதி சருமத்தை சுத்தி செய்வது, குங்குமமும், மஞ்சளும், ரத்தத்தை சுத்தப்படுத்துபவை. மேலும் நெற்றியில் இடும் திலகம் முகத்தின் களையை, அழகைப் பெருக்கவல்லது.

திருஷ்டி கழிக்க பயன்படும் ஆரத்தியில் சுண்ணாம்பை கலக்கலாமா?
– லதாராஜ், ஆம்பூர்.

மனிதர்களுக்கு திருஷ்டி கழிக்க பயன்படும் ஆரத்தியில் சுண்ணாம்பை கலக்கலாம். இறைவனுக்கு எடுக்கப்படும் ஆரத்தியில் குங்குமத்தைத்தான் கலக்க வேண்டும்.

கருட தரிசனம் செய்வதால் ஏற்படும் பலன்கள் யாவை?
– விநயா, தூத்துக்குடி.

கருட தரிசனம் செய்வதால் புண்ணியம் கிடைக்கும். செல்வம் பெருகும் என விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமையன்று கருடனைத் தரிசித்தால் நோய்கள் நீங்கும். திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் தரிசிக்க துயரங்கள் தொலையும். மற்ற நாட்களில் தரிசிக்க பில்லி சூன்ய பாதிப்புகள் நீங்குவதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.

கோயிலில் சுவாமியை பிரதட்சிணம் வருவதால் என்ன நன்மை? அப்பிரதட்சிணமாக வரக்கூடாதா?
– அமுதா, வைசாக்.

கோயிலில் சுவாமியை பிரதட்சிணம் வருவதால் மனம் தூய்மையடையும். அகங்காரம் குறைந்து பக்தி வளரும். பொதுவாக, போற்றுவதற்குரிய எந்தப் பொருளாக இருந்தாலும் அதை பிரதட்சிணம் செய்வது மரியாதைக்கு அடையாளம். உயிர் நீத்தவர்களை வழிபடும்போதுதான் அப்பிரதட்சிணம் செய்வது சம்பிரதாயம். கோயில்களில் நிச்சயமாக அப்பிரதட்சிணமாக வரக்கூடாது.

The post நெற்றியில் ஏன் திலகம் அணிகிறோம்? appeared first on Dinakaran.

Tags : Appanna ,Senkai ,
× RELATED பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கான...