![]()
சென்னை: மறைந்த இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மாரிமுத்து ஒரு அருமையான மனிதர்; அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மாரிமுத்துவை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார். இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் மாரிமுத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டர் பக்க செய்தியில், திரைப்பட இயக்குனரும் பிரபல நடிகருமான மாரிமுத்து அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது.
திரைப்படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து, உணர்ச்சிகரமான வசனங்கள் மூலமாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய மாரிமுத்துவின் திடீர் மரணம் திரைத்துறைக்கும் அவரின் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். மாரிமுத்து அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post மாரிமுத்து ஒரு அருமையான மனிதர்; அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது: நடிகர் ரஜினிகாந்த், டிடிவி தினகரன் இரங்கல் appeared first on Dinakaran.
