×

ஏழு தினங்களில் அனைவருக்கும் வீடு தேடி மகளிர் உரிமைத் தொகை வந்து சேரும்: சபாநாயகர் அப்பாவு

நெல்லை: ஏழு தினங்களில் அனைவருக்கும் வீடு தேடி மகளிர் உரிமைத் தொகை வந்து சேரும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். ராதாபுரம் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். கம்மாங்குடியில் ரூபாய் 605 கோடியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்படும் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் உதயத்தூர் கீழூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட இருக்கும் நியாய விலை கடை கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

The post ஏழு தினங்களில் அனைவருக்கும் வீடு தேடி மகளிர் உரிமைத் தொகை வந்து சேரும்: சபாநாயகர் அப்பாவு appeared first on Dinakaran.

Tags : Speaker ,Abbu ,Abad ,
× RELATED நெல்லையில் மழையால் சேதமடைந்த...