×

நாட்டின் 60% மக்களின் உணர்வுகளை ஒன்றிய பாஜக அரசு மதிக்கவில்லை: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேட்டி

பெல்ஜியம்: நாட்டின் 60 சதவீத மக்களின் உணர்வுகளை ஒன்றிய பாஜக அரசு மதிக்கவில்லை என என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ஐரோப்பாவுக்குச் சென்றுள்ள ராகுல் காந்தி, பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஜி20 மாநாட்டுக்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பாஜக அரசு அழைக்கவில்லை. ஒன்றிய அரசின் செயலுக்கு பின்னால் உள்ள சிந்தனையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீரின் முன்னேற்றம், அமைதி மீது நாங்களும் அக்கறை கொண்டுள்ளோம்.

ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் 60 சதவீத மக்களின் உணர்வுகளை ஒன்றிய பாஜக அரசு மதிக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் அரசின் தவறான கொள்கையால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. தொழில்துறையில் சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்தியாவில் கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் அரசின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. மணிப்பூரில் ஜனநாயக உரிமைதான் மக்களுக்கு தரப்பட வேண்டும்; மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் என ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

The post நாட்டின் 60% மக்களின் உணர்வுகளை ஒன்றிய பாஜக அரசு மதிக்கவில்லை: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,Congress ,Rahul Gandhi ,Belgium ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…