×

6 மாநிலங்களில் 7 தொகுதி இடைத்தேர்தல்; விறுவிறு வாக்குப்பதிவு..சமாஜ்வாதி, காங்கிரஸ் முன்னிலை..!!

லக்னோ: உத்தரப்பிரதேசம் கோஷி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுதாகர் சிங் முன்னிலை வகித்து வருகிறார். திரிபுரா, மேற்கு வங்கம், கேரளா, உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில், ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. வட கிழக்கு மாநிலமானதிரிபுராவின்,தன்புர், போக்ஸாநகர்; மேற்கு வங்கத்தின் துப்குரி; கேரளாவின் புதுப்பள்ளி; உ.பி.,யின் கோசி; ஜார்க்கண்டின் டும்ரி; உத்தரகண்டின் பாகேஷ்வர்ஆகிய தொகுதிகளுக்கு, கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தன்புர், பாகேஷ்வர், துப்குரி தொகுதிகளில் பா.ஜ.,வும், கோசி – சமாஜ்வாதி, போக்ஸாநகர் – மார்க்சிஸ்ட், டும்ரி – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, புதுப்பள்ளியில் காங்கிரசும் முந்தைய தேர்தலில் வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில், இடைத்தேர்தலில் சமாஜ்வாதி, காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

உத்தராகண்டில் பாகேஸ்வர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.

கேரள மாநிலம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னிலை வகித்துள்ளார்.

புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சாண்டி உம்மன் முன்னிலை பெற்றுள்ளார்.

பா.ஜ.க. வேட்பாளர் லிஜின் லால், மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜெய்க் தாமஸ் ஆகியோர் பின்தங்கியுள்ளனர்.

திரிபுராவில் போக்ஸாநகர் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.

The post 6 மாநிலங்களில் 7 தொகுதி இடைத்தேர்தல்; விறுவிறு வாக்குப்பதிவு..சமாஜ்வாதி, காங்கிரஸ் முன்னிலை..!! appeared first on Dinakaran.

Tags : States ,Samajwadi ,Congress ,Lucknow ,Samajwadi Party ,Sudagar Singh ,Uttar Pradesh Koshi Assembly ,Tripura ,Maajwadi ,Dinakaran ,
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...