×

அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவு

கீழக்கரை,செப்.8: கீழக்கரை நகரில் அரசு நிலங்களை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்துள்ளதாக தாசில்தாருக்கு மக்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் இந்நிலங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வருவாய் துறையினருக்கு கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் உத்தரவிட்டார். இதனடிப்படையில் கீழக்கரை வடக்கு தெரு, கிழக்கு தெரு, புது கிழக்கு தெரு, மேலத் தெரு, 500 பிளாட் ஆகிய பகுதிகளில் போலி ஆவணங்கள் மூலம் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக விஏஓ பாலமுருகன், தலைமை நில அளவையர் சொக்கநாதன் ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர்.

இதன் முதல் கட்டமாக கீழக்கரை வடக்கு தெரு பகுதியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்டோக்கு நோட்டீஸ் வழங்க தாசில்தார் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு நிலம் ஆக்கிரமிப்புகளை கையகப்படுத்த கலெக்டர், கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோருக்கு அதிகாரம் உள்ளது. அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசு நிலங்கள் மீட்டெடுக்கப்படும் என தாசில்தார் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

The post அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Geezakarai ,Keezakarai ,Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்