×

அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

பந்தலூர்,செப்.8:பந்தலூர் அருகே குந்தலாடி அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் பஜித்குமார் தலைமை தாங்கினார். ஆசிரியர் கோபு வரவேற்றார். திறன் மேம்பாட்டு பயிச்சியாளர்கள் ரவீந்திரன் மற்றும் அஜித் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்க்கை கல்வி திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல்,சுய பரிசோதனை, தீர்க்கமாக முடிவு எடுத்தல், திறமைகளை உணருதல்,அவற்றை மேம்படுத்துதல், கல்வியின் முக்கியத்துவம்,கற்றலின் மேம்பாடு, நினைவாற்றல் மேம்படுத்துதல் குறித்து விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சுஜித் நன்றி கூறினார்.

The post அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Kundaladi Government High School ,Headmaster ,Bajithkumar ,Head ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி