×

குருவாயூர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா பைக் மீது கார் மோதல் தியேட்டர் ஊழியர் பலி

மேட்டுப்பாளையம்,செப்.8: மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை தென்பொன்முடி பகுதியைச்சேர்ந்தவர் லிங்கப்பன்.இவரது மகன் காந்தி(48). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரபல சினிமா தியேட்டரில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காந்தி நேற்று முன்தினம் இரவு தியேட்டரில் இரண்டாவது காட்சி முடிந்தவுடன் தனக்கு சொந்தமான பைக்கில் தென்பொன்முடி நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளார்.

அதே வேளையில் அவிநாசி அருகே உள்ள கருவலூர் அங்காளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த மனோஜ்(29) என்பவர் மேட்டுப்பாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்துள்ளார். தேரம்பாளையம் ஏழு எருமைப்பள்ளம் அருகே வந்த போது பைக் மீது கார் மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட காந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

The post குருவாயூர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா பைக் மீது கார் மோதல் தியேட்டர் ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Krishna Jayanti festival ,Guruvayur temple ,Mettupalayam ,Lingappan ,Sirumugai Tenponmudi ,Gandhi ,
× RELATED நடிகர் ஜெயராம் மகள் மாளவிகா திருமணம்: குருவாயூர் கோயிலில் நடந்தது