×

சிங்கப்பூரில் விபத்து ஏற்படுத்திய தமிழருக்கு சிறை தண்டனை

சிங்கப்பூர்: இந்தியாவை சேர்ந்த அழகப்பன் கணேசன் சிங்கப்பூரில் உள்ள ஆசியா கட்டுமான நிறுவனத்தில் போர்க் லிப்ட் ஆபரேட்டராக பணியாற்றுகிறார். இவர் கடந்தாண்டு ஜூலை 7ம் தேதி, அடுக்குமாடி கட்டும் பணியில் இருந்த போது, சக தொழிலாளர் குஞ்சப்பா மகேஷ் வீசிய கேபிள் போர்க் லிப்ட்டின் கியர் மீது விழுந்தது. இதை எடுப்பதற்காக மகேஷ் போர்க் லிப்ட் மீது ஏறியதை கவனிக்காமல், கணேசன் போர்க் லிப்டை ரிவர்ஸில் இயக்கினார். இதில் மகேஷ் போர்க்லிஃப்டின் மேற்புறத்துக்கும் உத்திரத்துக்கும் இடையே நசுங்கி பலியானார். இதில் வேலை பார்க்கும் இடத்தில் அரசு பாதுகாப்பு விதிகளை மீறி அலட்சியமாக இருந்ததால் விபத்து ஏற்படுத்தியதாக கூறி கணேசனுக்கு 18 வாரங்கள், அதாவது நான்கரை மாதங்கள் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post சிங்கப்பூரில் விபத்து ஏற்படுத்திய தமிழருக்கு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Tags : Singapore ,Behagappan Ganesan ,India ,Asia Construction Company ,
× RELATED ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில்...