×

டொயோட்டா இனோவா ஹைகிராஸ் பிளக்ஸ் பியூயல்

டொயோட்டா மோட்டார், இனோவா ஹைகிராஸ் எம்பிவி பிளக்ஸ் பியூயல் காரை இந்தியாவில் சந்தைப்படுத்தியுள்ளது. இந்தக் காரை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகம் செய்தார். இது பெட்ரோல் அல்லது எத்தனாலில் மட்டுமே தனித்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, முழுவதுமாக பெட்ரோல் அல்லது எத்தனால் அல்லது இந்த இரண்டும் எந்த விகிதாசாரத்தில் கலந்திருந்தாலும் இந்தக் காரில் விருப்பம்போல் பயன்படுத்திக் கொள்ளலாம். 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தி இயக்கும் வகையில் புதிய கார்களை வடிவமைக்கும்படி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், டொயோட்டாவின் இந்த கார், உலகின் முதலாவது பிளக்ஸ் எரிபொருள் காராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளக்ஸ் பியூல் ஹைபிரிட்டாகவும் இருப்பதால், இதில் லித்தியம் அயன் ேபட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இந்தக் கார் மின்சக்தியிலும் இயங்கும். இந்த பேட்டரி, கார் ஓடும்போது தானாகவே சார்ஜ் செய்து கொள்ளும்.

இனோவாவின் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 181 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். லிட்டருக்கு 23.24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும். புதிய கார் பிளக்ஸ் எரிபொருள் என்பதால், இதை விட கூடுதலாக 30 முதல் 50 சதவீதம் எரிபொருள் சிக்கனம் கொண்டது என கூறப்படுகிறது. இந்த பிளக்ஸ் எரிபொருள் ஹைபிரிட் கார் சந்தையில் எப்போது விற்பனைக்கு வரும்? விலை எவ்வளவு? என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

The post டொயோட்டா இனோவா ஹைகிராஸ் பிளக்ஸ் பியூயல் appeared first on Dinakaran.

Tags : Toyota ,Toyota Motor ,India ,Union Minister ,Nidin ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...