×

கரும்பு விவசாயிகளுக்கு 15% வட்டி வழங்கக் கோரிய வழக்கில் 6 மாவட்ட ஆட்சியர்கள் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய கால தாமதத்திற்கான பணத்திற்கு 15% வட்டி வழங்கக் கோரிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒன்றிய வேளாண் துறை முதன்மைச் செயலாளர், மதுரை, திருச்சி உட்பட 6 ஆட்சியர்கள் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய பணத்திற்கு 15% வட்டி வழங்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கரும்பு விவசாயிகளுக்கு வட்டி வழங்குவது தொடர்பாக திருச்சி, தஞ்சை, தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆட்சியர்கள் பதிலளிக்க மதுரை கிளை ஆணையிட்டது.

அதாவது, சக்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய கால தாமதத்திற்கான பணத்திற்கு 15% வட்டி வழங்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. இதில், மத்திய வேளாண்துறை முதன்மை செயலாளர் உள்பட 6 மாவட்ட ஆட்சி தலைவர்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை சுவாமிமலையை சேர்ந்த சுந்தர விமல்நாதன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ்எஸ் சுந்தர் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு இவ்வாறு ஆணையிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

The post கரும்பு விவசாயிகளுக்கு 15% வட்டி வழங்கக் கோரிய வழக்கில் 6 மாவட்ட ஆட்சியர்கள் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ikort Branch ,Madurai ,Igourd Branch ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை