×

நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட ரூ.434 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட சாலைகள், புதிய மேம்பாலங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நாமக்கல் மாவட்டத்தில் ரூ.280.73 கோடியில் இருவழித்தடமாக மேம்படுத்தப்பட்ட சாலை திறக்கப்பட்டது.திருவொற்றியூரில் பங்கிங்ஹாம் கால்வாய் குறுக்கே ரூ.58.64 கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் திறக்கப்பட்டது. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட சுமார் ரூ.434 கோடி மதிப்பிலான சாலை மற்றும் மேம்பால திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை முதல்வர் திறந்து வைத்தார்.

இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் ரூ.280.73 கோடி ரூபாய் மேம்படுத்தப்பட்ட இருவழித்தட சாலை, இரண்டு வழித்தடமாக மேம்படுத்தப்பட்ட மோகனூர்-நாமக்கல்-சேந்தமங்கலம்-ராசிபுரம் சாலை, திருவொற்றியூரில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே ரூ.58.64 கோடியில் கட்டப்பட்டுள்ள 4 வழித்தட உயர்மட்ட பாலம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார். அதே போல் திருப்பூரில் ரூ.53.40 கோடி மதிப்பில் 4 வழித்தடத்திற்கு அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட பல்லடம்-தாராபுரம் சாலை, கோவை ஜி.என்.மில்ஸ் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள 4 வழித்தட சாலை, சென்னை காமராஜர் சாலையில் கட்டப்பட்டுள்ள சமூக நல இயக்குநர் அலுவலக கட்டடம் ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.

The post நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட ரூ.434 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stalin ,Highways Department ,Namakkal district ,Highway Department ,Dinakaran ,
× RELATED டபுள் டெக்கர் பேருந்து சேவையை இன்று...