தஞ்சாவூர், செப்.7: பாரதிய ஜனதா ஆட்சியை முழுமையாக அகற்றவேண்டும் என முற்போக்கு பெண்கள் கழகம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலத்தில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் தஞ்சை மாவட்ட முதலாவது மாநாடு நடைபெற்றது. மாவட்ட சிறப்பு தலைவர் விஜயாள் தலைமை வகித்தார். முன்னதாக தஞ்சை மாவட்ட முதலாவது அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் கொடியேற்றப்பட்டது.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: செப்டம்பர் 30, அக்டோபர் 1ல் புதுடெல்லியில் நடைபெறும் 9 -வது அகில இந்திய மாநாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் குடும்பத்தோடு கலந்து கொள்வது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சியை முழுமையாக அகற்ற ஒற்றுமையுடன் செயல்படுவோம். கூலி வேலை செய்யும் பெண்கள், இலவச வீட்டு மனை பட்டா வேண்டி கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநில அமைப்பாளர் ரேவதி, மாநில குழு உறுப்பினர் மாதவி, தேசிய குழு உறுப்பினர் பிலோமீனா, மாவட்டத் தலைவர் மாலதி, செயலாளர் செந்தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர்கள் கலா, சசிகலா, இந்திராகாந்தி, துணைச் செயலாளர்கள், கலையரசி,கவிதா,சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக தஞ்சை மாவட்ட முதலாவது அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் கொடியேற்றப்பட்டது.
The post வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ ஆட்சியை முழுமையாக அகற்றுவோம் முற்போக்கு பெண்கள் கழக மாநாட்டில் தீர்மானம் appeared first on Dinakaran.
