×

நாரா லோகேஷ் பாதயாத்திரையின்போது தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரசார் இடையே மோதல்

திருமலை: ஆந்திர மாநிலம் பீமவரத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நாரா ேலாகேஷ் பாதயாத்திரையின்போது தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரசார் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 3 போலீசார் உட்பட பொதுமக்கள் காயம் அடைந்தனர். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நாரா லோகேஷ் நடத்தி வரும் யுவகலம் பாதயாத்திரை 205வது நாளை எட்டியது.

நேற்று முன்தினம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பாதயாத்திரையை தொடர்ந்தார். இந்த பாத யாத்திரை மாவட்டத்தின் பீமாவரம் தொகுதியில் சென்றபோது, நாரா லோகேஷிற்கு கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். பின்னர், பீமாவரத்தில் உள்ள கணுபுடி சந்திப்பில் நடைபெற்ற ரோட் ஷோவில் நாரா லோகேஷ் பேசுகையில், ஜெகன் மோகன் மாநிலத்தை கொள்ளையடித்தார்.

ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பீமாவரம் எம்எல்ஏ கிராந்தி னிவாஸ் பீமாவரத்தில் கொள்ளையடிக்கிறார் என குற்றம்சாட்டி பேசினார். இதை கேட்டதும் திரண்டு வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் லோகேஷ் ஒழிக என்றும், ஜெகன் வாழ்க எனவும் கோஷமிட்டனர். இதனால் தெலுங்கு தேசம் கட்சியினர் ஒய்எஸ்ஆர் காங்கிரசார் மீது மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

அப்போது, பதிலுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரசாரும் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 3 போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்ைசக்காக கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

The post நாரா லோகேஷ் பாதயாத்திரையின்போது தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரசார் இடையே மோதல் appeared first on Dinakaran.

Tags : Telugu Desam ,YSR Congress ,Nara Lokesh Padayatra ,Tirumala ,Telugu Desam Party ,National General ,Nara Lokesh ,Bhimavaram, Telugu Desam ,
× RELATED ஆந்திர மாநில தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்....