×

கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில்

ஆரணி, செப்.6: ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆரணி சுற்றுவட்டார கிராமங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டப்பட்டது. அப்போது, பல வித அலங்காரங்களை தயார் செய்தும், கிருஷ்ணரின் பாதங்களை வரைந்தனர். மேலும், வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வருவது போன்ற பாதச்சுவட்டினை மாவால் பதியச் செய்வதும், கிருஷ்ணரின் சிலைக்கு பூக்களால் அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து, தயிர், வெண்ணை, அவல், சீடை, முருக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவு பொருட்களை வைத்து வைத்து படையலிட்டு வழிப்பட்டனர். அதேபோல், ஆரணி அடுத்த அக்கூர், அரையாளம் ஆகிய கிராமங்களில் உள்ள பெருமாள் கோயில் மற்றும் கிருஷ்ணர் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பல் தெருக்களிலும் நடந்த உரியடித்தல், வழுக்குமரம் ஏறுதல் உள்ளிட்ட நிழ்ச்சிகளில் நடந்தது. இதில், ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு வழுக்குமரம் ஏறியும், உரியடித்தனர். பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கிருஷ்ண வேடத்தில் அலங்கரிக்கப்பட்ட புஷ்பபல்லக்கில் சுவாமிகள் திருவீதிஉலா நடைபெற்றது. அப்போது, மேளதாளம், நாதஸ்வர இசையுடன் முக்கிய வீதிகளின் வழியாக சுவாமி ஊர்வலமாக சென்றது. இதில், பொதுமக்கள் தீபாராதனை செய்து வழிபட்டனர்.

The post கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் appeared first on Dinakaran.

Tags : Krishna Jayanthi Festival Kolakala Celebration ,Arani ,Krishna Jayanti ,Krishna Jayanti Festival Kolagala Celebration ,
× RELATED ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு