×

144.60 மில்லி மீட்டர் மழை

சேலம், செப்.7: தமிழக பகுதிகளில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சேலத்தில் நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் பலத்த மழை பெய்தது. இம்மழையால் சேலம் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மழைநீர் தேங்கியது. தொடர் மழை காரணமாக இரவு நேரத்தில் சீதோஷ்ணநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரவு, காலையில் இதமான குளிர்காற்று வீசியது. நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக ஏற்காட்டில் 31 மில்லிமீட்டர் மழை பெய்தது. மேட்டூர் 25.80, ஆத்தூர் 17.20, காடையாம்பட்டி 17, சேலம் 15.20, பெத்தநாயக்கன்பாளையம் 14, தலைவாசல் 13, ஆணைமடுவு 5, ஓமலூர் 2.40, தம்மம்பட்டி 2 என மொத்தம் 144.60 மில்லிமீட்டர் மழை பதிவானது.

The post 144.60 மில்லி மீட்டர் மழை appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamil Nadu ,Puducherry ,Karaikal ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் 85% பேருக்கு விநியோகம்