×

மதுரை எம்பி சு.வெங்கடேசன் டிவிட் ‘இந்தியா’ பாரத் என மாற்ற ரூ.14 ஆயிரம் கோடி செலவு: ‘மாணவர்களுக்கு 30 ஆண்டு காலை உணவு வழங்கலாம்’

மதுரை: மதுரை எம்பி சு.வெங்கடேசன், டிவிட்டரில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற முயற்சித்தவர்கள், இப்போது ‘இந்தியா’ என்ற பெயரை மாற்ற முயற்சிக்கின்றனர். இந்தியாவைக் கண்டு பிரிட்டிஷாருக்கு பிறகு அதிகம் பயப்படுகிறவர்களாக பாஜவினர் மாறியுள்ளனர். பெயர் மாற்றத்திற்கு பின்னால் இருப்பது தேசப்பற்றல்ல; தேர்தல் பயம். இவ்வாறு தெரிவித்துள்ளார். மற்றொரு பதிவில், அரசியல் சாசனத்தின் முதல் வரியான ‘இந்தியாவின் மக்களாகிய நாங்கள்’ (வி த பீப்பிள் ஆப் இந்தியா) என்பதன் மீதே பாஜவின் தாக்குதல். இந்தியா என்ற பெயரை மாற்ற செலவாகும் ரூ.14 ஆயிரம் கோடி, தமிழ்நாட்டின் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்கள் 17 லட்சம் பேருக்கு, 30 ஆண்டுகள் காலை உணவு வழங்கும் செலவுக்கு சமம்’ என தெரிவித்துள்ளார்.

The post மதுரை எம்பி சு.வெங்கடேசன் டிவிட் ‘இந்தியா’ பாரத் என மாற்ற ரூ.14 ஆயிரம் கோடி செலவு: ‘மாணவர்களுக்கு 30 ஆண்டு காலை உணவு வழங்கலாம்’ appeared first on Dinakaran.

Tags : Madurai ,S.Venkatesan ,India ,Bharat ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சிறுமிகள் காணாமல் போனதாக பெறப்படும்...