×

ஒன்றிய அரசின் ஊழலை மறைக்க அமைச்சர் உதயநிதி மீது பாய்ச்சல்: துரை வைகோ

கோவை: கோவையில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ‌ அளித்த பேட்டி: சனாதனம் ஒழிப்பு பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சரியான கருத்து. சனாதன அமைப்புகளின் தலைவர்கள், ஒன்றிய அரசின் தவறை மறைக்க, ஊழலை மறைக்க, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பாய்கிறார்கள். உ.பி.யை சேர்ந்த ஒரு சாமியார், உதயநிதி ஸ்டாலின் தலையை சீவுவேன் என்கிறார். இது, தலிபான் அமைப்பின் தீவிரவாத செயல் போன்று உள்ளது. இந்த தீவிரவாத செயலை மக்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள். தமிழக மக்கள், தங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறார்கள் என்பதை சனாதன தலைவர்கள் உணர வேண்டும். இங்கு பிரிவினையை உண்டாக்க முடியாது. தற்போது “பாரதம்’’ என்ற புதிய யுக்தியை கையில் எடுக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் “இந்தியா’’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், நாங்கள் இந்தியா என்றே அழைப்போம். இவ்வாறு துரை வைகோ கூறினார்.

The post ஒன்றிய அரசின் ஊழலை மறைக்க அமைச்சர் உதயநிதி மீது பாய்ச்சல்: துரை வைகோ appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi ,Union Government ,Durai Vaiko ,Coimbatore ,MDMK ,Principal Secretary ,Udhayanidhi Stalin ,Sanatanam ,Udhayanidhi ,Dinakaran ,
× RELATED முல்லை பெரியாறு விவகாரத்தில் ஒன்றிய...