×

இந்தியா பெயரை மாற்ற அதிமுக ஆதரவு

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அதிமுக பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அளித்த பேட்டியில், ‘‘நம் நாடு பாரத நாடுதான். பாரதம் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அனைவரும் பழமையை விரும்புகிறார்கள். அதே போலத்தான் பாரதமும் ஆகும். அதில் எந்த தவறும் இல்லை’’ என்றார். பேட்டி அளிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாகவே திண்டுக்கல் சீனிவாசனிடம், மரியாதை செய்ய இருக்கும் பி.கே.மூக்கையாத்தேவர் குறித்த விபரங்களை, எதையும் ‘மாற்றிச் சொல்லிடக்கூடாது’ என்றபடி ஐந்து நிமிடங்களுக்கு ஆர்.பி.உதயகுமார் பாடம் எடுத்தார். அதன்பிறகே திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் பேசியது குறிப்பிடத்தக்கது. பேட்டியின்போது, முன்னாள் அமைச்சர்கள் நந்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post இந்தியா பெயரை மாற்ற அதிமுக ஆதரவு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,India ,Usilambatti ,treasurer ,former ,minister ,Dindigul Srinivasan ,Usilambatti, Madurai district ,Bharat ,Dinakaran ,
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்