×

அயோத்தி சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி தருகிறேன் தலை, நாக்கை வெட்டுவேன் என்பவர் சாமியார் அல்ல கசாப்பு கடைக்காரர்: சீமான் பேட்டி

சென்னை: அயோத்தி சாமியாரின் தலையை சீவினால் நான் ரூ.100 கோடி தருகிறேன். மேலும், தலையை வெட்டுவேன், நாக்கை வெட்டுவேன் என்று கூறுபவர் சாமியார் அல்ல கசாப்பு கடைக்காரர் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: சனாதனத்தை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறில்லை. அவர் எறிந்த பந்தை பாஜவினர் எடுத்து விளையாடுகிறார்கள். ஒருவர் சொன்ன கருத்துக்கு கருத்துடன் தான் மோத வேண்டும், அதுதான் ஜனநாயகம். அதை தவிர்த்து தலையை வெட்டுவேன் என்று கூறுவது முறையல்ல. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசினால் அமித்ஷா ஏன் கோபப்படுகிறார்?.

உதயநிதி ஸ்டாலின் தலையை சீவினால் ரூ.10 கோடி தருவதாக கூறிய அயோத்தி சாமியாரின் தலையை சீவினால் நான் ரூ.100 கோடி தருகிறேன். அவரின் தலையை வெட்டுவேன், நாக்கை வெட்டுவேன் என்று கூறுபவர்கள் சாமியார் அல்ல கசாப்பு கடைக்காரர்கள். கொரோனா, டெங்கு நோய் போல சனாதனத்தை உதயநிதி ஸ்டாலின் ஒழிக்க முன்வர வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். வெறும் வார்த்தையாக இருக்கக் கூடாது. இந்தியாவின் பெயரை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அயோத்தி சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி தருகிறேன் தலை, நாக்கை வெட்டுவேன் என்பவர் சாமியார் அல்ல கசாப்பு கடைக்காரர்: சீமான் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Ayodhya ,Seeman ,CHENNAI ,
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்